அதிரை டுடே:ஏப்.18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருந்ததை அறிந்து வேதாரண்யம் DSP சபிபுல்லா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஊரடங்கு உத்தரவு மற்றும் ஏழ்மையின் காரணமாக உரிய சிகிச்சை பெறமுடியாமல் வீட்டில் முடக்கி கிடந்த போலியோவால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளை மீட்டு உயர் சிகிச்சை பெறுவதற்கு உரிய எற்பாடு செய்தார்.
பின்னர் அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை உணர்ந்து DSP சபிபுல்லா அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், மற்றும் செலவுக்கு தேவையான தொகை மேலும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உபகரணங்களான முக கவசம், கையுறை, கிருமி நாசினி, ஆகியவற்றை கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த மனிதநேயம் மிக்க செயலில் ஈடுபட்ட DSP சபிபுல்லா அவர்களை பொதுமக்களும், மாவட்ட SP செ.செல்வநாகரத்தினம் அவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
கடந்த ஆண்டு அகத்தியன் பள்ளியை சேர்ந்த செந்தில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதி சடகிற்கு உண்டான செலவையும், அவருடையை மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை வேதாரணியம் DSP சபியுல்லாஹ் அவர்கள் ஏற்றது குறிப்பிடத்தகது.
0 Comments