வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் அந்தந்த நாடுகளில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு செய்துள்ளது.
இந்தியாவில் நிலவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அவர்கள் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் நீதிமன்றம் பயண அனுமதி அளித்தால் மத்திய அரசு விடுத்துள்ள பயணத் தடைக்கு எதிராகவே அமையும் என்று உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
மேலும் உலகளாவிய கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் இப்போது வளைகுடா உள்ளிட்ட மற்ற நாடுகளில் உள்ளவர்களை (இந்தியர்களை) மீட்டு அழைத்து வர முடியாது என்றும் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மேலும் கூறுகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்தியர்களை திருப்பி அனுப்புவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள ஏழு பொதுநல மனுக்களும் அடுத்த நான்கு வாரங்களில் பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
0 Comments