அதிரை டுடே:ஏப்.18
கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் கூட அத்தியவாசிய கடைகள் 1 மணி வரை திறந்து இருக்க அனுமதி கொடுக்கபட்டு இயங்கி வருகிறது.
மல்லிப்பட்டிணம் கடைகள் எதும் இயங்க கூடாது என்ற அறிவிப்பு வந்தவுடன் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். மாவட்டம் வாரியாக நடவடிக்கை எடுத்தாலும் கூட மல்லிப்பட்டினத்திற்க்கு மட்டும் இவ் உத்தரவா?இல்லை தாசில்தார் மூலமாக நடவடிக்கைகள் எடுத்தாலும் அதுவும் மல்லிப்பட்டினத்திற்க்கு மட்டும் பொருந்துமா? நம் ஊர் அருகில் இருக்கும் ஊர்களுக்கு மட்டும் விதி விலக்கா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இக்குழப்பதில் இருக்கும் நம் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை அறிவிக்கும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.
நன்றி: மல்லி நியூஸ்
0 Comments