பட்டுக்கோட்டை அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் 


அதிரை டுடே:ஏப்.19
பட்டுக்கோட்டையை அடுத்த கழுகப்புலிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட துர்கா நகர் பகுதியில் நரிக்குறவர்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் உணவுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று முகநூலில் கொண்டிகுலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லப் பிள்ளை அவர்களின் மகன் பிரபாகரன் பதிவு செய்து இருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக சிரமப்படும் எளிய மக்களுக்கு உணவு பொருட்களை நாம் இயன்ற அளவு வழங்கி வருகிறோம். மேற்படி வந்த தகவலை மதுக்கூர் கொள்கை சகோதரர்கள் ஏற்பாட்டின் பேரில் 10 கிலோ அரிசி வீதம் சுமார் நூறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>