ஊரடங்கால் பாதிப்படைந்த மக்கள்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என உயர்நீதி மன்றம் உத்தரவு!!


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார்  வேண்டுமானாலும் நிவாரணம் வழங்கலாம் என உயர்நீதி மன்றம் உத்தரவு!!




அதிரை டுடே : ஏப்ரல்,16

 ஊரடங்கு பிறப்பித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க யாரும் பொது மக்களுக்கு உணவுகள் வழங்கிறோம் என்று பொது இடங்களில் வீதிகளில் கூட்டம் கூடக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் 
 ஆர். எஸ். பாரதி அவர்கள் தொடுத்த வழக்கில் இன்று தமிழக உயர் நீதி மன்றம் தீர்ப்பில் ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என உதவும் மனம் கொண்டவர்கள் நிவாரணம் வழங்கலாம் என சில நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது..
இதில் நிவாரணம் கொடுக்க நினைப்பவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே மாநகராட்சி,நகராட்சி, பேருராட்சி என எந்த இடமாக இருந்தாலும் அந்தந்த இடத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்க வேண்டும். மற்றும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு டிரைவர் உட்பட 4 நபர்கள் செல்லலாம் எனவும், அவர்கள் முறையாக மாஸ்க், சானிடைசர் மற்றும் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது....


உங்களுக்கான செய்திகளுடன்!! உங்களுக்காக!! ADIRAI TODAY NEWS..

Post a Comment

0 Comments

'/>