தோப்புத்துறையை மையப்படுத்தி பரப்பப்படும் கொரோனா வதந்தி மறுப்பு அறிக்கை


அதிரை டுடே:ஏப்.01
தோப்புத்துறையிலிருந்து டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு 10க்கும் மேற்ப்பட்டவர்கள் சென்று வந்ததாகவும் , அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் துவேஷ எண்ணம் கொண்டவர்களால் வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்ப்பபடுகிறது , இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தோப்புத்துறையிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த தருணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டெல்லி சென்று திரும்பிய வெளியூர் நபர் ஒருவர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் உறவினர் வீட்டுக்கு விருந்தினராக வந்த இடத்தில் தங்கிய தகவல் உள்ளூர் ஜமாத் நிர்வாகத்திற்கு கிடைத்தவுடன் சம்மந்தப்பட்ட நபர் குறித்த தகவலை உள்ளூர் நிர்வாகம் மூலம் அரசு நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டுசென்று , அந்த நபர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் (ஆய்வில் அவருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை அவருக்கும் அந்த நோய் உறுதி செய்யப்படவில்லை) மேற்கண்ட தகவலை வேதாரண்யம் சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தி விட்டது.

அன்பார்ந்தவர்களே இந்த நெருக்கடியான தருணத்தில் தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள், செய்தியின் உண்மை தன்மையை ஆராயாமல் பரப்பாதீர்கள் என்ற வேண்டுகோளை உங்கள் அனைவருக்கு முன்னாலும் வைக்கிறோம். மேலும் உண்மை தகவல்களை அறிந்திட ஆவல் உள்ளோர் வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தையோ, தோப்புத்துறை சகோதரர்களையோ தொடர்பு கொள்ளுங்கள்! நிச்சயம் யாரேனும் அப்படி டெல்லியோ இன்னும் பிற வெளி மாநிலங்களுக்கோ சென்று ஊர் திரும்பி இருந்தால் அந்த தகவலை எங்கள் ஊர் ஜமாத் நிர்வாகம் மூலம் சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்போம்.

நமது பகுதிக்கு இந்த கொடிய நோய் பரவாமல் தடுப்பது நமது கடமை, அதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்போம், அப்படி யாருமே செல்லாத தருணத்தில் திட்டமிட்டு வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடமும் பதற்றமும் குழப்பமும் உண்டாக்குவது கவலை அளிக்கிறது.! கொடிய நோயோடு வெறுப்புணர்வையும் நம் அனைவரும் ஒன்று சேர்ந்து அழித்தொழிப்போம் !

மரத்தடி நண்பர்கள் - தோப்புத்துறை

Post a Comment

0 Comments

'/>