அதிரை டுடே:மார்.31
கொரோனா வைரஸ்ஸால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர் எனும் பேதமின்றி ஊரடங்கு காரணம் இன்னல்களிலும் சிக்குண்டு தவிப்போருக்கு காயல்பட்டணம் "முஸ்லிம் ஐக்கிய பேரவை" அமைப்பினர் மூலம் பல நல்ல உள்ளங்களின் பொருளுதவியால் மகத்தான சேவையைத் துவங்கியுள்ளார்கள்.
நலிவடைந்த மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வினியோகம். சுமார் 3,600+ பயனாளிகள் கண்டறியப்பட்டு, நபர் ஒன்றுக்கு ரூபாய் 1,800 மதிப்பில் (64 லட்சம்+ மொத்த மதிப்பில்) உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். அதற்கான பேக்கிங் போடும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மதிப்பீடு மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.
இடம்.: ஜலாலியா திருமண மண்டபம்.
காயல்பட்டணம்.
"இதையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த அனைத்து ஊர்களிலும் உள்ள தன்னார்வல தொண்டு அமைப்பினர் மற்றும் தனவந்தர்கள் முன் வர வேண்டும்."
"நன்மையை நாடிச் செய்யும் அனைத்து நற்கருமங்களுக்கும் உங்கள் இறைவனிடத்தில் மகத்தான நற்கூலி நிச்சயம் உண்டு..." அல் குர்ஆன்.
தகவல் மற்றும் படங்கள்: V D Sadak Thamby
0 Comments