கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி குவைத்தில் நுழைய இந்தியா, இலங்கை உள்ளிட்ட 10 நாட்டவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்


அதிரை டுடே:மார்.03
கொரோனா வைரஸ் எதிரொலியால் குவைத் நாட்டிற்கு செல்பவர்கள் பி.சி.ஆர் எனப்படும் சான்றிதழ் பெற்றே குவைத் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குவைத் அரசு தெரிவித்து உள்ளது.

கீழ்கானும் நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத்துக்கு செல்ல பி.சி.ஆர் சான்றிதழ் பெற வேண்டும் பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, சிரியா, அஜர்பைஜான், துருக்கி, இலங்கை, ஜார்ஜியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இது பொருந்தும். சுகாதார துறையின் மையங்களிலிருந்து மருத்துவ சான்றிதழ் (Fitness Certificate)பெறவேண்டும். இது நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, மேல்குற்றிபிட்ட நாடுகளில் உள்ள குவைத் தூதரகத்திலால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தபட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் சான்றிதழ் குவைத்தில் நுழையும் போது பயணி விமான நிலையத்தில் வழங்கப்பட வேண்டும். மேல் குற்றிபிட்ட நாடுகளில் குவைத் தூதரகம் இல்லாத நிலையில், இந்த நாடுகளின் மாநிலங்களின் சுகாதார துறை அதிகாரிகளால் வழங்கபடும் அங்கீகார சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 8 முதல் இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும் என்றும் செய்தியில் விளக்கம் அளித்துள்ளது. வெளியிடப்பட உத்தரவை பின்பற்றாமல் மீறும் விமான நிறுவனங்களுக்கும் உத்தரவு அதன் விபரம் பின்வருமாறு:

சான்றிதழ் இல்லாமல் மேல்குற்றிபிட்ட நாடுகளில் இருந்து பயணிகளை அழைத்து வருகிற விமான நிறுவனங்களே அதே விமானத்தில் மீண்டும் திரும்பி தாயகம் அழைத்துச் செல்ல வேண்டியது இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குவைத் குடிமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

'/>