CAA, NRC, NPR எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு நிதியுதவி ~ பொருளுதவி கோருதல்!

அதிராம்பட்டினம், பிப்.20
CAA, NRC, NPR எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு நிதியுதவி ~ பொருளுதவி கோருதல்!
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக்குழு சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நேற்று (19-02-2020) புதன்கிழமை மாலை தொடங்கி இன்று
(20-02-2020) வியாழக்கிழமை 2-வது நாளாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. 
அல்ஹம்துலில்லாஹ்!

இப்பணிக்காக, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இரவும், பகலுமாக தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிட்டு களப்பணியாற்றி வருகின்றனர்.  

இறைவனின் பேருதவியால் இந்த தொடர் போராட்டத்தின் நோக்கம் விரைவில் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்! இதற்கு நம்மில் பலரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். எனவே, போராட்டக் களத்திற்கு தேவையான சேர், மைக்செட், பந்தல், தார் பாய், CAA, NRC, NPR எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், தேசியக்கொடி, குடிநீர் பாட்டல், தேநீர், குளிர் பானம், பிஸ்கட், காலை, மதியம், இரவு வேளைகளில் உணவு  உள்ளிட்ட செலவினங்களை பகிர்ந்துகொள்ள எண்ணும் நல்லுள்ளங்கள்  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள கீழ்காணும் களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு நிதியுதவி அல்லது பொருளதவி வழங்கலாம். இன்ஷா அல்லாஹ்!

மேலதிக தொடர்புக்கு
1. அதிரை மைதீன் (9080775227)
2. அகமது ஸ்டோர்' அகமது அனஸ் (8608550557)
3. ஏ.கே சாகுல் ஹமீது (9952139442)

குறிப்பு: தனிநபர் வங்கிக்கணக்கில் பணம் அனுப்புதலை தவிர்க்கவும்.

Post a Comment

0 Comments

'/>