கத்தார் நாட்டிலிருந்து நேரடி விமானச் சேவை; புதிய இன்டிகோ தொடக்கம்..!

அதிரை டுடே.பிப் 21
கத்தார் நாட்டிலிருந்து நேரடி விமானச் சேவை; இன்டிகோ தொடக்கம்..!
இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான இன்டிகோ ஏர்லைன்ஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டிற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது.இதன்படி, இந்தியாவின் இன்டிகோ எர்லைன்ஸ் கத்தார் தோஹாவிற்கும் இந்தியா பெங்களூருக்கும் இடையே நேரடி விமானச் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இன்டிகோவின் 6E 1724 விமானம் அட்டவணைப்படி, கத்தார் தோஹாவிலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 2.40 மணிக்கு பெங்களூரில் தரையிறங்கும் என்றும்‌, அதேபோல் பெங்களூரில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு கத்தார் ஹமத் விமான நிலையத்திற்கு வந்துசேரும் என கூறப்பட்டுள்ளது.மேலும், இதற்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்கான வசதி “இன்டிகோ ஏர்லைன்ஸ்” இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>