அதிரை டுடே. பிப் 21
அதிரையில் 3 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் தர்ணா முழக்க போராட்டத்திற்கு தெரு வாசிகளுக்கு அழைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முதல் பிப்.19 தொடர் தர்ணா முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் முழக்க போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதோடு, கண்டன உரையும் ஆற்றி வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக வலு சேர்க்கும் விதமாக கடற்கரைத்தெரு முஹல்லா வாசிகள் அனைவரையும் கலந்துக்கொண்டு கோஷங்களையும் எழுப்புவீர் என கடற்கரைத்தெரு இயங்கி வரும் பீச் உறவுகள் வாட்ஸாப் குரூப் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.
0 Comments