மதுக்கூரில் தொடரும் கருப்பு சட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு

அதிரை டுடே.பிப் 02
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதுக்கூரில் நடைபெற்ற  CAA NRC NPR கருப்பு சட்டங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி  சிட்டி யூனியன் வங்கி எதிரே உள்ள ஹதீஜா மஹாலில் நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட்  நகர தலைவர் M.ஷேக் அஜ்மல் MBA தலைமை வகித்தார் பாப்புலர் ஃப்ரண்ட்  நகர செயலாளர் U.அன்வர் உசேன் வரவேற்புரை வழங்கினார் பாப்புலர் ஃப்ரண்ட் டிவிஷன் தலைவர் U.அப்துல் ரஹ்மான் BE ,
SDPI கட்சி நகர தலைவர் TJ மாப்பிளை தம்பி காதர் மற்றும்
நகர செயலாளர் A.அசாருதீன் B.com முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக உயர்நிதிமன்ற வழக்கறிஞர் N.முஹம்மது ஷாஜஹான் Bsc BL
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொருளாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கருப்பு சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கேள்விகளை   சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
இறுதியாக M நஜிப் BBA LLB  அவர்கள்
நன்றியுரை கூறினார் இந்நிகழ்ச்சில் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



தகவல்
M. ஷேக் அஜ்மல் MBA
நகர தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மதுக்கூர் நகரம்

Post a Comment

0 Comments

'/>