அதிரை டுடே.பிப் 24
காதல் சின்னம் தாஜ்மகாலை கண்டு வியந்த டிரம்ப்
ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ராவில் உள்ள 'காதல் சின்னம்' தாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்டார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தை திறந்துவைத்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதன்பின்னர், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட ஆமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டார். ஆக்ரா விமானநிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் 3000 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தாஜ்மகாலை காண சென்றார். 10 கி.மீ., தூர பயணத்தில் 31 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தாஜ்மகாலில் டிரம்ப் வருகையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.
0 Comments