அதிரை டுடே:பிப்.19
அதிரையில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு குழு சார்பில் தொடர் தர்ணா போராட்டம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதற்கு ஆதரவளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற வேண்டியும், டெல்லி மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்த சம்பவங்களை கண்டித்தும் தக்வா பள்ளிவாசல் அருகில் ஜாவியா ரோட்டில் தொடர் தர்ணா போராட்டம் இன்று 19/02/2020 புதன்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கியது.
ஆர்ப்பாட்டத்தின் முதல் நாள் இன்று ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அதிகமானவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.
இச்சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments