சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட மத்திய அரசு ஒப்புதல்

அதிரை டுடே.பிப் 04

பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லையா? 
செய்தியை முழுமையாக படிக்கவும் 

சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒருங்கிணைந்த முறையில் கட்டணம் வசூலிக்க தேசிய மின்னணு சுங்க வரித் திட்டத்தை (என்இடிசி) செயல்படுத்தி உள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம் முதலே மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் தற்போது அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் மூலமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இந்த முறை நாடு முழுவதும் கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் கட்டாயப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தினம் தினம் புதிய புதிய பிரச்னைகள் உருவாகி வருவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
வாகன உரிமையாளர்களில் பெரும்பாலானோர் பாஸ்டேக் பெற்றுவிட்டனர். மற்ற அனைவரும் பாஸ்டேக் பெறுவதற்கு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
இதில் அவர்களுக்கான பாஸ்டேக் கிடைக்கும் வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இரட்டிப்புக் கட்டணம் செலுத்தும் சூழலே உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு பகுதிக்கு சென்று திரும்பி வர பணப்பரிவர்த்தனையின்படி சலுகை வழங்கப்படும். உதாரணமாக, வானகரம் சுங்கச்சாவடி வழியாக செல்ல ரூ.40 கட்டணம் என்றால் 24 மணி நேரத்துக்குள் திரும்பும் சூழலில், திரும்பி வர கட்டணமாக ரூ.20 செலுத்தினால் போதும். பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு, பணப்பரிவர்த்தனையில் செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டேக் முறையில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டாலும் சர்வர் கோளாறு காரணமாக ஒரு சில நேரங்களில் முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை விதிகளிலே ஸ்கேனிங் முறை செயலிழக்கும் பட்சத்தில் வாகனத்தை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் பெற்றே வாகனத்தைக் கடக்க அனுமதிக்கிறார்கள். அதுவும் இரட்டிப்புக் கட்டணம் கொடுத்து அந்த சுங்கச்சாவடியைக் கடக்கும் நிலையே உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் சர்வர் பிரச்னை காரணமாக ஸ்கேனிங்கில் சிக்கல் ஏற்பட்டாலும் ஊழியர்கள் மற்றொரு முறை ஸ்கேன் செய்ய மறுக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை வாகன ஓட்டிகள் தெரிவித்து வரும் சூழலில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், 'நெடுஞ்சாலைத்துறை கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவுமே பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் நெடுஞ்சாலைத் துறை வெற்றியும் கண்டுள்ளது. ஒரு சில இடங்களில் இருக்கும் சர்வர் பிரச்னைகளையும் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அவை சீர் செய்யப்படும். அதே நேரம் ஒரு வாகனத்தின் பெயரிலேயே பல பாஸ்டேக்குகள் பெற்று மோசடி நடைபெறுகிறது.
இதுவும் ஸ்கேனிங்கில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம். முடக்கப்பட்ட பாஸ்டேக் பயன்படுத்தப்பட்டு ஸ்கேன் செய்யமுடியாமல் இருக்கும் போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அந்த நேரத்தில் நெடுஞ்சாலை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த வாகனத்தை அங்கிருந்து அனுப்பி விடுகின்றனர். இது போன்ற முறைகேடுகளுக்கும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். மொழிப் பிரச்னை, வழிகாட்டுதல்கள் அனைத்தும் நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

இந்நிலையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவூத் செவ்வாயன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், பாஸ்டேக்  முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இதுதொடர்பான சிக்கல்கலைக் களைய விரைவான நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத் துறை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

'/>