அதிரை டுடே.ஜன 26
ஒரே நாடு ஓரே குடும்ப அட்டை திட்டம் முதல் கட்டமாக திருநெல்வேலி,தூத்துக்குடியில் அமல்
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை
குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் முதல் கட்டமாக திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டம் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments