அதிரையில் மஜக தொழிற்சங்க கொடியேற்று விழா மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு.


அதிரை டுடே:ஜன.01
அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்ச் சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்க கொடியேற்றும் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்புவிழா நடைபெற்றது.

அதிரையில் திருமண நிகழ்வில் மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்கள் கலந்து கொண்டு பேசியபோது.

மத்திய அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை தமிழக மண்ணில் அமல்படுத்த ஒரு காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். மீறி அமல்படுத்தினால். அதை எதிர்த்து அடுத்தகட்டமாக ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம் என்றார்.

இந்த போராட்டத்தில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் களத்திற்கு வந்ததுபோல, பனராஸ் இந்து பல்கலைகழக மாணவர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள். இந்த போராட்டம் என்பது அரசியல் சாசனம் சட்டத்தின் பி.மு 14, பி.மு 15, பி.மு 20 உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்காக நடத்தக்கூடிய போராட்டம் என்பதை மறந்துவிடக்கூடாது.

குடியுரிமை என்று ஒன்று இருந்தால்தானே நாம் திருமணம் நடத்த முடியும், வியாபாரம் செய்ய முடியும், கல்வி கற்க முடியும், அரசியல் செய்ய முடியும்.
குடியுரிமையற்று அகதிகளாக இருந்தால் இதுபோன்றவைகளை செய்ய இயலுமா? என்றார்.

திருமண நிகழ்வு முடிந்த பின் அதிரை பேருந்து நிலையம் அருகில் ஈ.சி.ஆர். சாலையில் தொழிற்ச் சங்க ஆட்டோ ஸ்டாண்ட் திறந்த பின் தொழிற்ச் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், ஊடக பிரிவு மாநில பொருளாளர் ஹமீத் ஜாபர், மாவட்ட செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், மா.து.செயலாளர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயலாளர் யாசர் அரபாத், ஜப்பார், வக்கில் நிஜாமுதீன், முகமது அமீன், சாவண்ணா, தமீம், தொழிற் சங்க நிர்வாகிகள் செல்வம், ஹாஜி அலி, ஹக், முகமது ஆரிப், இப்றாஹிம், மற்றும் மனிதநேய சொந்தங்கள் திறளாக கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments

'/>