விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் SDPI கட்சி சார்பில் போராட்டம்


அதிரை டுடே:செப்.24

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் SDPI கட்சி சார்பில் போராட்டம்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் SDPI கட்சி சார்பில் போராட்டம் 24.09.2020 இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு

2. பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், 

3.விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் S. அகமது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சட்ட நகல் கிழித்தெரிப்பு போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி MBA அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

சட்ட நகல் கிழித்தெரிப்பு போராட்டத்திற்கான கண்டன கோஷங்களை எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர இணைச் செயலாளர் C. அஹமது.MSC எழுப்பினார்கள். இந்த சட்ட நகல் கிழித்தெரிப்பு போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர பொருளாளர் N.M. சேக் தாவுது அவர்களும் மற்றும் கிளை 1 தலைவர் M.I. ஜமால் முஹம்மது அவர்களும் மற்றும் நகர நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






 


Post a Comment

0 Comments

'/>