குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கான தடைகள் நீக்கம்..!

அதிரை டுடே ஆகஸ்டு.10      குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கான தடைகள் நீக்கம்; 
ஓரிரு நாட்களில் விமானங்கள் மீண்டும் பறக்கத் தொடங்கும்:

இந்தியா மற்றும் குவைத் நாடுகளின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் இறுதியாக நேற்று இரவு குவைத் நேரம் 9.00 வரை நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த மூன்று வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை இந்திய விமான நிறுவனங்களுடன் குவைத்திலிருந்து வந்த வந்தே-பாரத் திட்டத்தில் இணைந்து விமான சேவைகளை வழங்கும் 

இந்த மாதம் 10-ஆம் தேதி முதல், இருநாடுகளின் விமான நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 1000 இருக்கைகள் எண்ணிக்கையில் தினசரி  விமானங்களை இந்தியாவுக்கு இயக்குவதற்கு ஒப்புக்கொண்டனர். இதில் 500 இருக்கைகள் குவைத் தேசிய விமான நிறுவனங்களுக்கும் 500 இருக்கைகள்  இந்திய விமான நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யபட்டது.

இருப்பினும், இந்திய பயணிகளுக்கு குவைத் விதித்த நுழைவுத் தடை நடைமுறையில் இருப்பதால் இருக்கை கட்டுப்பாடுகள் தடையை நீக்கக்கோரி இந்திய விமான அதிகாரிகள் நேற்று குவைத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்றைய கலந்துரையாடலில் இந்திய சிவில் விமான அமைச்சகத்தின் கோரிக்கைக்கு குவைத் விமான அதிகாரிகள் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதையடுத்து குவைத் விமானத்துறை அதிகாரிகள் பதில் கடிதத்தில் ஒரு நாளைக்கு 1,000 இருக்கைகள் என்ற கட்டுப்பாடுகள்  நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ஏழு விமானங்களை குவைத்திலிருந்து குவைத் விமான நிறுவனங்கள்  இயக்கும்  என்றும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூன்று வாரங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள குவைத்திலிருந்து இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு வழிவகை பிறந்துள்ளன. இதையடுத்து இந்திய விமான நிறுவனங்கள் குவைத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படும் அதே விகிதத்தில் சேவைகளை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானம் இரண்டு நாட்களில் பறக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் #Ktpnews

Post a Comment

0 Comments

'/>