அதிரை டுடே: ஜூன்27
ஐந்து அம்ச கோரிக்களை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் SDPI கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டிணம் கிளை SDPI சார்பாகவும் இன்று புதுப்பட்டிணத்தில் இன்று காலை 11 மணியளவில் புதுப்பட்டிணம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம நடைபெற்றுது.
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மற்றும் பொதுமக்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
SDPI கட்சியினரின் ஐந்து அம்ச கோரிக்கைகள் கீழ்வருமாறு:
1. வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் அழைத்து வரவேண்டும்.
2. பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்திட வேண்டும்.
3. மின்கட்டணம் , டோல்கேட்கட்டணங்களை ரத்து செய்யவும்.
4.ரேஷன்பொருட்களை கொரானா முடியும் வரை இலவசமாக வழங்கிட வேண்டும்.
5.அனைத்துகல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிட வேண்டும்.
என இவ்வாறு ஐந்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி
சமூக இடைவெளியோடு
உரிமைக்கான போராட்டம் நடத்தினர்.
பின்னர் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
0 Comments