அதிரை டுடே:மே.09
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கொரோனா என்றால் என்வென்றே தெரியாத நிலையில் தற்போது கொரோனா என்ற பெயர் ஆட்கொல்லி வைரஸ் என உலக நாடுகளை நினைக்க தோன்றிவிட்டது. ஆனால் குஜராத்தில் கொரோனா பெயரில் ஹோட்டல் துவங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குஜராத் -ராஜஸ்தான் மாநில எல்லையில் குஜராத்தின் வடக்கு மாவட்டமான பானஸ்கந்தா மாவட்டத்தில் தான் இந்த ஹோட்டல் உள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் பாலி நெடுஞ்சாலை வழியாக வரும் குஜராத் வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஹோட்டலில் பசியாற்றிவிட்டு செல்ல தவறுவதில்லை. தற்போது நாடு தழுவிய ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது என்றாலும் இப்போது அந்த வழியாக வருபவர்கள் ஹோட்டலின் பெயரை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன் மொபைலில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
இது குறித்து இந்த ஹோட்டலின் உரிமையாளர் பரக்கத்பாய் கூறுகையில், 2015-ம் ஆண்டு இந்த ஹோட்டலை கட்டினேன். கொரோனா என்றால் அரபு மொழியில் கேலக்ஸி என கூறினார். இருந்தாலும் கொரோனா என்ற பெயர் பிடித்திருந்ததால் அந்த பெயரை ஹோட்டலுக்கு வைத்தேன் என்றார்.
0 Comments