கொச்சி: துபாயிலிருந்து 177 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம்இன்று இரவு கேரளா வந்திறங்கினர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அவர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இதன்படி ஏர்இந்தியா விமானம் துபாய் சென்றடைந்து. அங்கு 49 கர்ப்பிணிகள் உள்பட 177 இந்தியர்களை மீட்டு கொச்சிக்கு புறப்பட்டது. இதன்படி இன்று இரவு 10.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது.
0 Comments