கொரோனா: அதிரையில் ரெட்கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டு


அதிரை டுடே:மே.17
தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு பெரும் உதவி புரிந்த, ரெட்கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தர்மராஜ் அவர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளையில் அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தர்மராஜ் அவர்கள், கொரோனா காலத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.

அதிரையின் பல கொரோனா நோயாளிகளை சிகிச்சை முடிந்து நிவாரணம் பெற்று வீடு திரும்புவதற்கு கொண்டு வந்து வீட்டில் சேர்த்தவர். இந்நிலையில் அதிரையிலிருந்து கொரோனா சந்தேகத்தின்பேரில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கடைசி நபரும் வீடு திரும்பிய நிலையில் அவரையும் தர்மராஜ் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அதிரையில் சேர்த்தார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் தர்மராஜை கவுரவிக்கும் வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை அலுவலகத்தில் அவர் ஏற்கனவே ஊர் கொண்டு வந்து சேர்த்த அனைத்து நபர்களும் தர்மராஜை கவுரவப் படுத்தியதோடு, அவருக்கு நன்றியும் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது அதிரை கிளையின் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

'/>