அதிகப்படியான விமான கட்டணம் கேட்பது மனிதநேயமற்ற செயல்..? மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது கண்டனம்..!




அதிரை டுடே மே.3
குறுகிய கால பயணமாக மலேசியா வந்த பயணிகள்  உலகலாவிய கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்  கடந்த 50 நாட்களாக சரியான உணவின்றி, தங்க இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

இச்சூழ்நிலையில், இன்று மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அதிகாரிகள் முதல் கட்டமாக வயதானவர்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் இந்தியா அழைத்து செல்ல இருக்கிறோம். ஆகவே,  விமான கட்டணமாக 1800 வெள்ளி (சுமார் 30,000 ரூபாய்) பணம் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அனைத்து நாடுகளும் ஊரடங்கில் சிக்கிய தன் நாட்டவர்களை கட்டணமின்றி அழைத்துச் சென்றன.

மலேசியாவில் சிக்கிய நமது நாட்டவர்கள் இருக்கிறார்களா? மரணித்தார்களா? என்று கூட இதுவரை கண்டு கொள்ளாத இந்திய தூதரகம் தற்போது நமது நாட்டு பயணிகளை அழைத்துச் செல்ல அதிக பணம் கேட்பது மனித நேயமற்ற செயல்.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை கட்டணமின்றி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கட்டணமின்றி அழைத்துச் செல்ல வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் கூறினார்.

Post a Comment

0 Comments

'/>