கொரானோ பதிப்பில் உயிர் இழந்த முஸ்லிம் சகோதரியின் உடலை ஏரித்த கொடூரம்..!

கொரானோ பதிப்பில் உயிர் இழந்த முஸ்லிம் சகோதரியின் உடலை ஏரித்த கொடூரம்..!

மரணித்த இஸ்லாமிய சகோதரியின் மகனின் கண்கலங்க வைக்கும் வாக்கு மூலம்..!

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ந்து சிங்கள அரசால் வஞ்சிக்கபடுவது வேதனைக்குரியது கண்டிக்கதக்கது. என்று சமுக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




வண்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று #இலங்கையில் நடக்கும் கொடுரம் இறந்தவர்கள் உடலில் இருந்து கொரோனா பரவாது என்று உலக சுகாதார துறை அறிவித்தும் இலங்கையில் இஸ்லாமியர்களை ஏரிப்பது ஏன் வாய் மூடி போகும் இஸ்லாமிய சகோதரர்களே தங்கள் கண்டனங்களை அதிகப்படுத்தவும் 

றினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை !
 கணவருக்கு அனுமதி மறுப்பு !!
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−---
இறுதியில் எரியூட்டப்பட்டது.....

கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று ( 05.05.2020 ) மரணமடைந்த,  கொழும்பு  − மோதரையைச் சேர்நத பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட மற்றும் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க அவரது கணவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை என மரணித்தவரின் மகன் சப்ரின் தெரிவித்தார்.

இது குறித்து அவர்,  மேலும் குறிப்பிட்டதாவது,

வபாத்தான எனது உம்மாவை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன், அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும் அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தை பெற்றார்கள்.

எனது உம்மாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.  

எனினும் எனது உம்மாவின் ஜனாஸாவை பார்வையிடவோ அல்லது அவருக்காக தொழுகை நடத்தவோ எனது வாப்பாவை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.

இது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்து உள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்கு காட்டாமையும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காமையும் நியாயமா..?

இந்த புனித ரமழான் காலத்தில் உங்கள் பிரார்த்தனையில் எங்கள் உம்மாவையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்..

---- Thanks to Jaffna Muslim ----
05/05/2020.....

Post a Comment

0 Comments

'/>