மூன்று லட்சம் மதிப்புடைய முக கவசம் வாரி வழங்கிய தோப்புத்துறை தொழிலதிபர் ஆரிபா 


அதிரை டுடே:மார்.26
கொரோனா வைரஸால் தமிழகம் செய்வதறியாது தினறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்குமோ என்று மக்கள் பதை பதைத்து போயிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் நாகை மாவட்டம் தோப்புத்துறையை சார்ந்த பிரபல தொழிலதிபர் ஆரிபா மூன்று லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய முக கவசத்தை இலவசமாக வேதை சுற்றுவட்டாரப் பகுதியில் வினியோகித்து வருகிறார். இது அந்த பகுதியில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வேதை பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் முக கவசத்தை இலவசமாக வினியோகம் செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கஜா புயலில் பாதிப்பின் போதும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நிவாரணங்கள் வழங்கியதாக அப்பகுதி மக்கள் நன்றி மறவாமல் ஆரிபா அவர்களை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

'/>