முத்துப்பேட்டை நகரம் சார்பாக இன்று 71வது குடியரசு தினத்தில் சமதான புறா..

அதிரை டுடெ.ஜன 26

SDPI கட்சியின் முத்துப்பேட்டை நகரம் சார்பாக இன்று 71 வது குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை நகர தலைவர்  S.அகமது பாஷா தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் E.K.N மர்சூக் அகமது மற்றும் நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தேசியக்கொடியினை முத்துப்பேட்டை நகர முன்னாள் துணைத்தலைவர் P.M காதர்முகைதீன் DCTO அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதன் பிறகு மாவட்ட தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா குடியரசு தின உரை உறுதிமொழியை வாசித்தார்.




இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர்.
அபூபக்கர் சித்தீக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக நகர இணைச் செயலாளர் மேஸ்திரி மாலிக் நன்றியுரையாற்றினார்.
இன்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி முடிவில் சமதான பறவை என அழைக்கப்படும் புறா பறக்கவிடப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>